full screen background image

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த ‘சேத்துமான்’ படம் மே 27-ல் வெளியாகிறது

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த ‘சேத்துமான்’ படம் மே 27-ல் வெளியாகிறது

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரைப்படங்கள தயாரித்து வருகிறார்.

இதுவரையிலும் ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரை வால்’, ‘சார்பட்டா பரம்பரை’, உள்ளிட்ட படங்கள் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.

இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறு கறி’ எனும் சிறுகதையை  ‘சேத்துமான்’ எனும் பெயரில் திரைப்படமாக தயாரிக்க ‘நீலம் புரொடக்சன்ஸ்’ முன் வந்தது. அறிமுக இயக்குநரான தமிழ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் பிந்து மாலினி இசையமைப்பாளராகவும், C.S.பிரேம் குமார் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

புனே சர்வதேசத் திரைப்பட விழா, கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. சென்னை திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றிருந்தது.

தாத்தாவிற்கும், பேரனுக்கும் இடையிலான மாசற்ற அன்பைப் பேசும் இப்படத்தில் தாத்தாவாக மாணிக்கமும், பேரனாக அஷ்வினும் நடித்துள்ளனர்.

பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்ற சேத்துமான்’ சிறந்த தயாரிப்புக்கான விருதையும் பெற்றது .

இத்திரைப்படம் இந்த மாதம் மே 27-ம் தேதி சோனி லைவ்வில் திரைப்படம் வெளியாகிறது.

Our Score