இயக்குநர் சீனு ராமசாமி கோடம்பாக்கத்தின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். இப்போதெல்லாம் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கடைசியாக அவரை பேச அழைக்கும் அளவுக்கு, மனிதர் பேச்சில் வெளுத்துக் கட்டுகிறார்..!
3 நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் “ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களெல்லாம் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க வேண்டும். அப்போதுதான் சின்ன பட்ஜெட் படங்களும் பிழைச்சுக்கும்” என்றார். இன்று நடந்த ‘ஆதார்’ படத்தின் இசை வெளியிட்டு விழாவிலும் அதையே முன் மொழிந்தவர்.. ‘கிழக்கு சீமையிலே’ படத்தை இதற்கு உதாரணமாகச் சொன்னார். “அந்தப் படம் சின்ன பட்ஜெட்டுதான். ஆனால் பாடல்கள் அருமையா இருந்துச்சு.. அதுனாலேயும் படத்துக்கு ஒரு பப்ளிசிட்டி பெரிசா கிடைச்சது.. இதே மாதிரி சின்ன பட்ஜெட் படங்களுக்கு பெரிய இசையமைப்பாளர்கள் இசையமைக்க ஒத்துக்கிடணும்..” என்றார்..
எல்லாம் சரி சாமி..! “இதே மாதிரி சின்ன பட்ஜெட் படத்துல நடிக்க நம்ம ஹீரோக்கள் ஒத்துக்குவாங்களா..? இசையமைப்பாளர்களைவிட ஹீரோக்கள் ஒத்துக்கிட்டா போதுமே.. தயாரிப்பாளர்களுக்கு துட்டு மேல துட்டு வருமே..? கமல், ரஜினி, அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி இவங்க எல்லாரும் இதுக்கு ஒத்துக்குவாங்களா..? மாட்டாங்கள்ல..? அப்புறம் இசையமைப்பாளர்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா.. 2 லட்சம் மட்டும் வாங்கிட்டு, 5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செஞ்சு கொடுக்க”ன்னு ஒருத்தர் கேக்குறாரு..?
இதுவும் நியாயமாத்தான இருக்கு..!?