‘சீமராஜா’வின் பாடல்களால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்..!

‘சீமராஜா’வின் பாடல்களால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்..!

இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மற்றும் டி.இமான் கூட்டணியோடு பாடலாசிரியர் யுகபாரதியும் சேர்ந்தால் அது வெற்றிக் கூட்டணியாகத்தான் இருக்க முடியும். 'ரஜினி முருகன்' மற்றும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பாடல்களை கேட்டாலே எல்லோருக்கும் இது புரியும்.

வரும் செப்டம்பர் 13-ம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று வெளிவரவிருக்கும் 'சீமராஜா' திரைப்படத்திலும் இந்த வெற்றிக் கூட்டணியின் மாயாஜாலம் தொடர இருக்கிறது.

lyricst yugabharathy

இத்திரைப்படத்தில் தனது அனுபவங்களைப் பற்றிய பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, "சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் டி.இமான் உடனான என்னுடைய இந்தத் தொடர்ச்சியான மூன்றாவது படத்தின் பயணம் ‘சீமராஜா’வில் என் வேலையை மேலும் எளிதாக்கியிருக்கிறது.

இதனை மாயாஜாலம் எனக் குறிப்பிடுவதைவிட, இந்த குழுவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நாங்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளோம் என்றுதான் கூறுவேன்.

நாங்கள் எல்லோரும் இந்தப் படத்தில் ஒன்றாக ஒப்பந்தமான உடனே எங்கள் உடலில் திருவிழா அதிர்வு பரவியது. மேலும், சிவகார்த்திகேயனுடனான எனது பழக்கம், அவரது இமேஜுக்கு ஏற்றவாறு வரிகளை சேர்க்க எனக்கு நிறைய உதவியது.  

‘சீமராஜா’வின் பாடல்கள் வேடிக்கை, கொண்டாட்டம், உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் உருவாகி மக்களை சிறப்பாக சென்றடைந்து இருக்கிறது.

இதற்கு பாடல் வரிகள் மட்டும் காரணமல்ல, ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இமான் சார் கொடுத்திருக்கும் இசையும் ஒரு காரணம். பாலசுப்ரமணியம் சாரின் வண்ணமயமான ஒளிப்பதிவும், நடன இயக்குநர்களின் உழைப்பும் கூடுதலாக கவர்ந்திருக்கிறது..." என்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.