ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரையில் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீடு!

ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரையில் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீடு!

ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பதுதான்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் தனது திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார்.

அந்த வகையில் சமீபத்திய முயற்சியாக தங்களது பெருமைமிகு படைப்பான ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் ஆர்.டி.ராஜா.

 ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழாவை மிகப் பெரிய வெற்றியாக மாற்ற மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

இது பற்றி பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, “மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில்தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தோம்.

எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயனின் அபரிமிதமான வளர்ச்சியும், இந்த முடிவுக்கு மிக முக்கியமான ஒரு காரணம். மேலும் இந்த படத்தின் மையக் கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, மனப்பூர்வமாக முடிவு செய்தோம்.

ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்…” என்று தன்னம்பிக்கையோடு கூறினார்.

 

#Seemaraja – Audio Launch Announcement | 24AM STUDIOS #Seemaraja is a 2018 Indian Tamil language action comedy drama film written and directed by #Ponram and produced by #RDRaja. The film stars #Sivakarthikeyan and #Samantha Akkineni in the lead roles, with a supporting cast including #Napoleon, #Simran and #Soori. The film features music composed by #DImman and cinematography by Balasubramaniem. Producer R.D. Raja is collaborating with Sivakarthikeyan for the third time. Cast : Sivakarthikeyan Samantha Akkineni Soori Napoleon Simran Lal Manobala KeerthySuresh #Cameo Crew : Written & Directed by : Ponram Cinematographer : Balasubramaniem Music Director: D.Imman Editor : Vivek Harshan Art Director : T.Muthuraj Stunts : Anl Arasu lyricist : Yugabharathi Sound Designer :Tapas Nayak Choreographers : Dinesh | Shobi | Baba Baskar Vfx Desginer: PhantomFx Costume Designers : Anu Parthasarathy | Deepali Noor Stills : G.Anand Kumar Publicity Desginer : Tuney John PRO : Suresh Chandra | Rekha Done Production Executive : V.Muthu Kumar Executive Producer : S.Ravikumar Produced by : RD Raja Production : 24AM STUDIOS Audio Label : Think Music

Our Score