தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு துறையை சார்ந்தவர்களும் நடிகர்களாக அறிமுகமானது உண்டு. அந்த வகையில் நடிகைகள் அவ்வளவாக வருவது இல்லை. ஆனால் சமீப காலமாக பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் நடிகைகளாக அறிமுகம் ஆகிறார்கள்.
இயக்குனர் விஜய் இயக்கத்தில்… Think big ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘சைவம்’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் இந்த புதமுக நடிகை வித்யா ஒரு சயின்டிஸ்ட்டாம்.
“வித்யா நடிப்பின் மீதான தன்னுடைய அணுகு முறையில் மிகவும் கவனத்துடன் இருந்தார். திரையுலகின் நுணுக்கங்களை கற்று கொள்வதில் ஏகப்பட்ட ஆர்வம் காட்டி வந்தார். காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பில் அவர் காட்டிய ஆர்வமும், ஈடுபாடும் பெருமைக்குரியது…” என்று தன்னுடைய அறிமுகத்தை பற்றி பெருமையாக கூறினார் இயக்குனர் விஜய்.
Stem cell biology என்ற பிரிவில் ஆராய்ச்சியாளராக இருக்கும் வித்யா ‘சைவம்’ படத்தில் தன்னுடைய அனுபவத்தை பற்றிக் கூறும்பொது “சைவம் போன்ற ஒரு கண்ணியமான குடும்ப கதையுள்ள படத்தில் அறிமுகமாவது எனக்குப் பெருமையா இருக்கு. கண் பார்வையை ஒளிர வைக்கும் cornea வகை தொழில் நுட்பத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்வதே என் குறிக்கோள்..” என்றார். “நடிப்பை தொடருவீர்களா..?” என்ற கேட்டால் “சைவம் மாதிரியான நல்ல படங்களென்றால் நிச்சயமாக நடிப்பேன்” என்கிறார்.
ஆடுன காலும், பாடின வாயும் ச்சும்மாவே இருக்காது என்பார்கள்..! நிச்சயமா நீங்க திரும்பி வருவீங்கம்மா..!