full screen background image

மருதமலை முருகன் கோவிலில் துவங்கிய புதிய திரைப்படம் “ஸ்கார்”(SCAR)

மருதமலை முருகன் கோவிலில் துவங்கிய புதிய திரைப்படம் “ஸ்கார்”(SCAR)

‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், தனது அடுத்த படைப்பாக “ஸ்கார்”(தழும்பு) என்னும் திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தை ஸ்ரீலக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் டாக்டர் ஆர்.பிரபாகர் ஸ்தபதி மற்றும் ஜி மீடியா ஃபிலிம் பேக்டரி ஆகியோர் இணைந்து பிரம்மாண்ட செலவில் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் பூஜை கடந்த ஜூன் 25-ம் தேதியன்று கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்றது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான நடிகர் தேர்வு (Audition) தற்போது சென்னை கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு குறித்துப் பேசிய படக் குழுவினர், ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஊட்டி, கேரளா வயநாடு, பெங்களூரு மற்றும் கனடா போன்ற பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன.

திரைப்படத்தின் முக்கிய தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் மற்றும் படத்தின் டைட்டில் டீஸர் (Title teaser) ஆகியவற்றை, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட தயாரிப்பு நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Our Score