அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் M.N.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சவரிக்காடு’.
இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடித்துள்ளனர்.
மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், ‘அல்வா’ வாசு, ‘அவன் இவன்’ ராமராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.கோகுல், இசை – A.T.இந்ரவர்மன், பாடல்கள் – தேவதேவா, திருக்குமரன், படத் தொகுப்பு – மாரீஸ், கலை – எம்.ராஜா கண்ணதாசன், நடனம் – விஜயபாண்டி, சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வா, தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.நாகராஜன், தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – M.N.கிருஷ்ணகுமார்.
படம் பற்றி இயக்குநர் எம்.என்.கிருஷ்ணகுமார் பேசும்போது, “இதுவொரு புது மாதிரியான திரைக்கதையம்சம் கொண்ட படம். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
நண்பர்களைப் பற்றியும், நட்பைப் பற்றியும், உயர்வான மதிப்பை ஏற்படுத்தும் படமாக இந்த ‘சவரிக்காடு’ உருவாகி உள்ளது.
இந்த படத்திற்காக ‘காடு காடு சவரிக்காடு, நெஞ்சில் துணிவிருந்தால், நெருங்கிப் பாரு’ என்ற பாடல் காட்சிக்காக ‘சவரிக்காடு’ என்ற பெயர் பொறித்த சட்டைகள் உருவாக்கப்பட்டு சென்னை மற்றும் மலேசியாவில் பொதுமக்களின் பங்களிப்புடன் பாடலை படமாக்கியிருக்கிறோம். இந்த பாடல் காட்சியில் பல திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர். படம் விரைவில் வெளி வர உள்ளது…” என்றார்.