full screen background image

தம்பியை நினைத்துப் பெருமைப்படும் அண்ணன் ஆர்யா..!

தம்பியை நினைத்துப் பெருமைப்படும் அண்ணன் ஆர்யா..!

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா நடித்து வெளிவர உள்ள ‘அமரகாவியம்’ படத்தை பார்த்த சில திரை உலக பிரமுகர்களின் கருத்துப்படி, சத்யா அடுத்த தலைமுறை நடிகர்களில் முக்கியமானவர் என கணிக்கப்படுகிறார்.

Jeeva (2)

இந்தப் புகழாரங்கள் அவரை சந்தோஷத்தின் உச்சத்தில் வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை. ‘அமரகாவியம்’ படத்தைப் பற்றி பேசும்போதும், தன்னுடைய சகோதரர் ஆர்யாவை பற்றி பேசும்போதும் அவருடைய கண்களில் பிரகாசம் தெரிகிறது.

“இயக்குனர் ஜீவா சங்கர் எங்களது நெருங்கிய குடும்ப நண்பர், அதனால் ‘அமரகாவியம்’ கதையை கேட்கும் பாக்கியம் எனக்கு பல முறை கிடைத்து உள்ளது. மனதில் சற்று பொறாமையுடன் அந்த கதைக்கு நானே பல்வேறு நாயகர்களின் பெயரை சிபாரிசு செய்தேன்.

திடீரென ஒரு நாள் ஆர்யா என்னிடம், ‘நான் அந்த கதையை தயாரிக்க போகிறேன்; நீ நடிப்பாயா?’ என கேட்ட போது எனக்கு தலை கால் புரியவில்லை. இந்த கதை நிச்சயமாக எனக்கு ஒரு நடிகனாக அடையாளம் தரும் என நம்பிக்கையோடு உடனடியாக ‘சரி’ என்றேன்.

ஆர்யா படம் பார்த்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். அவருடைய கருத்தை அறிய ஆவலுடன் இருந்தேன். என்னைப் பற்றி எல்லோரிடமும் பேசிய ஆர்யா என்னிடம் மட்டும் பேசவில்லை. இது என்னுடைய பரபரப்பை கூட்டியது. என்னுடைய அலைபேசியில் அவர் பெயர் Flash ஆகும்போது என்னுடைய படபடப்பு கூடியது. அவர் என்னிடம் ‘நான் உனக்காக சந்தோஷப்படுகிறேன். பெருமைப்படுறேன். நான் தயாரிப்பாளராக வெறும் முதலீட்டு செய்பவனாக மட்டும் இல்லாமல், இந்தப் படத்தை பெரும் வெற்றி படமாக்க பல திட்டங்கள் வைத்து இருக்கிறேன்..’ என்றார்.

ஆர்யாவை பற்றி நான் அறிந்தவரை, அவர் எதிலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என சிந்திப்பவர்.. அதன் அடிப்படையில் இந்த மாதம் 28-ம் தேதி நடைபெறவிருக்கும் ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மிக வித்தியாசமாக இருக்கும்..” என்று நான் நம்புகிறேன் என்றார் சத்யா.

Our Score