full screen background image

‘சாட்டை’ பட இயக்குனர் அன்பழகனுக்கு திருமணம்..

‘சாட்டை’ பட இயக்குனர் அன்பழகனுக்கு திருமணம்..

ஷாலோம் ஸ்டுடியோஸ் & இயக்குனர் பிரபு சாலமன்  தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘சாட்டை’ படத்தை இயக்கிய இயக்குனர் அன்பழகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எம்.மாலா என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்யவிருக்கிறார் அன்பழகன். இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.

director anbalagan

இவர்களது திருமணம் வருகிற  ஆகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமையன்று அரியலூர் மாவட்டம்  ஜெயம்கொண்டம் அருகில் உள்ள செந்துறையில் நடைபெற உள்ளது. திருமண விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

மணமக்களுக்கு எமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

Our Score