full screen background image

சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ அமர்க்களமாகத் துவங்கியது..!

சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ அமர்க்களமாகத் துவங்கியது..!

ஒரு விசயத்தை புதிதாகத் துவங்கும்போது அங்கே பல அனுகூலமான நிகழ்வுகள் நடப்பது மகிழ்வான விஷயம்.

ஒரு படத்தின் படப்பிடிப்பை முதன்முதலாகத் துவங்கும்போது எடுக்கப்படும் முதல் ஷாட், மிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவேதான் முதல் ஷாட்டாக என்ன எடுக்கலாம் என்பது பற்றி இப்போதும் திரையுலகில் பலவிதமான சிந்தனைகளும் கருத்துகளும் விவாதிக்கப்படுவது இயல்பாக இருக்கிறது. 

அந்த வகையில் சர்வர் சுந்தரம் படத்துக்கு எடுக்கப்பட்ட முதல் ஷாட்டைவிட சிறப்பாக வேறு எந்த ஷாட்  இருக்க முடியும்..?

சர்வர் சுந்தரமாக நடிக்கும் ஹீரோவான சந்தானம் பால் காய்ச்சும் ஷாட்  முதலில் எடுக்கப்பட, அட்டகாசமாகத்  துவங்கியது சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு. 

சர்வர் சுந்தரமாகவே  மாறி நின்ற சந்தனம் “இந்த உடையில் நிற்கும்போது நான் என்னை ஒரு உண்மையான சமையற்காரன் போலவே உணர்கிறேன்…” என்றார் .

அதைக் கேட்ட இயக்குநர் ஆனந்த் பால்கி, “நடிகர் சந்தானத்தை சர்வர் சுந்தரமாகப் பார்க்கும்போது, முன்னர் நான் ஒரு ஹோட்டலில் சமையற் கலைஞராக பணியாற்றியது எனக்கு நினைவுக்கு வருகிறது..” என்றார்.

இப்படியாக, வழக்கமாக ஒரு படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் பதட்டமேதும் இல்லாமல்,  படக் குழுவே கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரித்துக் குவித்தபடி பணி செய்தது.

இந்தப் படத்தில் பிஜேஷ் என்பவர் இரண்டாம் கதாநாயகனாக நடிப்பது சந்தோஷமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்.  எந்த வகையில்..? 1964-ம் ஆண்டு வெளிவந்த உண்மையான காவியமான ‘சர்வர் சுந்தரம்’ படத்தில், நம்மால் என்றும்  மறக்க முடியாதபடி சிறப்பாக நடித்த நகைச்சுவை மாமன்னன் அமரர் நாகேஷ் அவர்களின் மூத்த பேரன்தான் இந்த பிஜேஷ். 

தயாரிப்பாளராக கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார், இசை அமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், இயக்குனராக ஆனந்த் பால்கி ஆகியோர், தேவையான சமையல் பொருட்களாக மாறி சமைக்கப்படும் இந்த சர்வர் சுந்தரம் என்ற சினிமா விருந்து,  எல்லோருக்கும் ருசியாக அமையும்.

Our Score