அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சரித்திரம் பேசு’. ‘அகிலன்’ படத்தில் நடித்த மதுரை டாக்டர் சரவணன் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு இதில் ஜோடி கிடையாது. இளம் ஜோடிகளாக கிருபா- கன்னிகா இருவரும் அறிமுகமாகிறார்கள்.
‘பதினெட்டாம் குடி’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகேஸ்வரன் போஸ் இதில் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். ‘பசங்க’ படத்தில் சிறுமியாக நடித்த தாரணி இதில் யோகேஸ்வரன் போஸ் ஜோடியாக நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, வெங்கல்ராவ், பரளி நாகராஜ், பாண்டிராஜ், செல்லத்துரை, கிரிக்கெட் மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஜெகதீஷ் – வி.விஸ்வம்.
இசை – ஜெயகுமார். இவர் இசையமைப்பாளர் தேவாவிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியவர்.
எடிட்டிங் – லட்சுமணன் – ரோம்.
பாடல்கள்-யோகேஸ்வரன் போஸ், ஜெயகுமார், பசுபதி அழகப்பன், பேராசிரியர் ஜெயபால், ஸ்டாலின்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீமகேஷ். இவர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ என்ற படத்தை இயக்கியவர். தற்போது ‘மலர் மேல்நிலைப் பள்ளி’ என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
தயாரிப்பு – யோகேஸ்வரன் போஸ்
தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் கிருபாவும் அவரது நண்பர்களும் கொலை என்று சொன்னாலே காததூரம் ஓடுபவர்கள். ஆனால் சூழ்நிலை அவர்களை எப்படி கோபக்காரர்களாக மாற்றியதுதான் கதையாம். முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி ஆக்சன் கலந்த பரபரப்பான படமாகவும் உருவாகியிருக்கிறது. ‘அகிலன்’ படத்தில் நடித்த மதுரை டாக்டர் சரவணனின் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்படும் என்கிறார் இயக்குனர் ஸ்ரீ மகேஷ்.