full screen background image

கார்த்தி நடிக்கும் ‘சர்தார்-2’ படம் பூஜையுடன் துவங்கியது..!

கார்த்தி நடிக்கும் ‘சர்தார்-2’ படம் பூஜையுடன் துவங்கியது..!

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘சர்தார்-2’ படத்தின் பூஜை, சமீபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

‘சர்தார்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, P.S.மித்ரன்   இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ்   தயாரிப்பில்  உருவாகும்  ‘சர்தார்-2’  படத்தின்  படப்பிடிப்பு,  ஜூலை 15-ம் தேதி முதல் சென்னையில் துவங்கி  நடக்க உள்ளது.

மிக பெரிய பொருட்செலவில் தயாராகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ். சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், கலை இயக்குநர் –  ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பு – வேலு குட்டி,  தயாரிப்பு நிர்வாகம் – AP பால் பாண்டி, இணை தயாரிப்பு – A வெங்கடேஷ், தயாரிப்பு – S லக்ஷ்மன் குமார், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்குமார் (S2 Media).

 

Our Score