மறைந்த சரவண பவன் ஓட்டல் அதிபரான ராஜகோபாலின் வாழ்க்கை மற்றும் அவருடன் ஜீவஜோதி நடத்திய சட்டப் போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி `Dosa King’ என்ற பெயரில் பாலிவுட்டில் படம் ஒன்று உருவாக இருக்கிறது.
ஹிந்தி படவுலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஜங்லி பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக ஜீவஜோதியுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாம். இந்தப் படம் 150 கோடி ரூபாய் செலவில் தயாராகவுள்ளதாம். ஜீவஜோதி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகைக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தை ஜெய் பீம் பட இயக்குநரான த.செ.ஞானவேல் இயக்கவிருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
ஏற்கெனவே தமிழில் இந்தக் கதையைப் படமாக்க ஒரு டீம் செயல்பட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் பாலிவுட்டுக்கே இந்தக் கதை சென்று பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது.
இருந்தாலும் ராஜகோபாலின் மகன்கள் தங்கள் தந்தையின் கதையைப் படமாக்க அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே.. இந்தப் படம் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுக்களில் பயணம் செய்துதான் முடிவாகும் என்பது உறுதி.