நடிகர் சரத்குமார் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார்.
கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிக்கும் படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றது. ‘சென்னையில் ஒரு நாள்-2’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தினை ராம் மோகன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜெ.பி.ஆர். இயக்குகிறார்.
இத்திரைப்படத்தில் தீபக் ஒளிப்பதிவாளராகவும் ‘மாயா’ புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திரில்லர் கதையை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ‘நிசப்தம்’ பட புகழ் குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் நடிக்க இருக்கிறார்.
“சரத்குமாரின் கதாபாத்திரம் ஸ்டைலிஷ் under cover agent, அவர் இந்த படத்தில் புலன் விசாரணை செய்யும் முறை படத்தை பரபரப்பாக வைத்திருக்கும். மேலும், இந்த திரைப்படம் அனைவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்..” என கூறுகிறார் இயக்குநர் ஜெ.பி.ஆர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கோவையில் தொடங்கியது. தொடர்ந்து 30 நாள்கள் கோவையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்.