‘நறுமுகையே’ டைட்டில் ‘நீ நான் நிழல்’ என மாறியுள்ளது..!

‘நறுமுகையே’ டைட்டில் ‘நீ நான் நிழல்’ என மாறியுள்ளது..!

‘சண்டமாருதம்’ படத்திற்கு முன்பே சரத்குமார் நடித்திருக்கும் படம் ‘நறுமுகையே’. இப்போது இந்தப் படத்தின் பெயரை ‘நீ நான் நிழல்’ என்று மாற்றம் செய்திருக்கிறார்கள்.

இதுவொரு மலேசிய இந்திய கூட்டு தயாரிப்பில் உருவாகும் திரைப்படம். இந்தப் படத்தில் சரத்குமாருடன் மனோஜ் கே.ஜெயன், அஜ்மல், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலேசிய பெண் திசுந்தா இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜான் ராபின்சன் இயக்கி உள்ளார்.

தமிழ் நாட்டு இளைஞன் மலேசிய பெண் ஒருத்தியை பேஸ்புக்கிலேயே காதலிக்கிறான். அவளை சந்திப்பதற்காக மலேசியா செல்கிறான். அங்கு அவள் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். அவள் யார்..? அவளை கொலை செய்தது யார் என்பதை சரத்குமார் கண்டுபிடிப்பதுதான் கதையாம்.

இதில் சரத்குமார் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். காதலனாக அஜ்மல் நடித்துள்ளார். இதன் பெரும்பகுதி மலேசியாவில்தான் படமாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் பாடல்களையும், அடுத்த மாதம் படத்தையும் வெளியிட இருக்கிறார்கள்.

Our Score