‘ஜிகர்தண்டா’ பட விவகாரம் – நடிகர் சித்தார்த்துக்கு சரத்குமார் ஆதரவு..!

‘ஜிகர்தண்டா’ பட விவகாரம் – நடிகர் சித்தார்த்துக்கு சரத்குமார் ஆதரவு..!

‘ஜிகர்தண்டா’ திரைப்பட வெளியீட்டை தனக்குத் தெரிவிக்காமல் தள்ளி வைத்ததற்கு அப்படத்தின் ஹீரோ சித்தார்த் தனது கணடனத்தைத் தெரிவித்திருந்தார். இதற்காக சித்தார்த்தை கண்டித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு பிரிவினரும், தயாரிப்பாளர் கதிரேசனும தனித்தனி அறிக்கைகளும் வெளியிட்டிருந்தனர்.

அந்தச் செய்தி இந்தப் பதிவில்..!

இப்போது நடிகர் சங்க தலைவர் சரத்குமார், சித்தார்த்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

அவர் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’ஒரு சினிமா வெளி வருவதில் அதில் நடித்த நடிகருக்கும் அக்கறை உள்ளது. ‘ஜிகர்தண்டா’ பட விவகாரத்தில் அந்த படம் வெளி வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நடிகர் சித்தார்த் பேசி உள்ளார். தயாரிப்பாளர் இப்பிரச்சினையை பெரிதாக்கி இருக்க வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

Our Score