தமிழ்நாட்டை பாடாய்படுத்தும் மது சாம்ராஜ்யத்தை முன் வைத்து, ஒரு புரட்சிகரமான படைப்பாக உருவாகி வருகிறது “சரக்கு” திரைப்படம்.
ராஜ் கென்னடி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், நடிகர் மன்சூர் அலிகான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.
மேலும் கஜினி அலிகான், மஹபீர் அலிகான், விஜய் சேதுபதி, இயக்குநர் ஜெயக்குமார்.ஜே, தில்ரூபா அலிகான், ஜஹாங்கிர் அலிகான் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோரும் நடிக்கின்றனர்!
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநரான ஜே.ஜெயக்குமார் படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு அருள் வின்சென்ட் – மகேஷ்.டி, இசை சித்தார்த் விபின், திரைக்கதை, வசனம் – எழிச்சூர் அரவிந்தன், படத் தொகுப்பு – எஸ்.தேவராஜ், சண்டை இயக்கம் – சில்வா, பத்திரிகை தொடர்பு – கோவிந்தராஜ்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!










