‘முண்டாசுப்பட்டி’ கொடுத்த ஹிட்டுடன் அடுத்த ஹிட்டுக்குத் தயாராகிவிட்டார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.
பிரபல நகைச்சுவை நடிகர் அனுமோகனின் மகன் அருண் மோகனின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘சரபம்’தான் சி.வி.குமாரின் அடுத்த வெளியீடு.
இதில் தெலுங்கு நடிகர் நவீன் சந்திராவும், சலோனி என்ற டெல்லிவாழ் புதுமுகமும் அறிமுகமாகியிருக்கிறார்கள். ஹீரோயின் வேட்டைதான் பல நாட்கள் நடந்ததாம். “ஹீரோயினுக்கு நான் கொடுக்குற சம்பளமே கம்மிதான்.. ஆனா ஹீரோயினை செலக்ட் பண்றதுக்கு நான் பண்ணின செலவு அதைவிட அதிகம்..” என்று சொல்லிச் சிரித்தார் சி.வி.குமார்.
இத்தனை கஷ்டப்பட்டும் சூப்பரான ஒரு ஹீரோயினை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். சலோனி பார்வையில் ஒரு புறம் தீபிகா படுகோனேவுக்கு தங்கச்சி போலவே உள்ளார். சிரிக்கும்போது அபபடியே தீபிகாதான்.. வெல்கம் சலோனி..!
“சரபம் என்ற டைட்டில் தமிழ்தானா..?” என்று கேட்டதற்கு “இதற்கு இலக்கணத் தமிழில் ‘சிங்கம்’ என்றுதான் அர்த்தம். இந்தப் படத்துக்கு வேற ஒரு தலைப்பு வைச்சோம். பட் அந்தத் தலைப்பை ஏற்கெனவே ரிஜிஸ்தர் பண்ணி வைச்சிருந்தாங்க. கொடுக்கவும் மாட்டேனுட்டாங்க. அதுனால வேற வழியில்லாமல் இதை வைச்சோம்..” என்றார் தயாரிப்பாளர்.
“வரிவிலக்கு கிடைக்குமா..?” என்று சந்தேகம் எழுப்பியதற்கு.. “வரிவிலக்கு வராதுங்கறது எங்களுக்கு முன்னாடியே தெரியும். ஏன்னா இது ‘ஏ’ சர்டிபிகேட்படம்தான்னு நாங்க ஷூட்டிங்குக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டோம். அதுனால நமக்கு அதைப் பத்திக் கவலைையே இல்லை..” என்றார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.
“கதையைச் சொன்ன உடனேயே சி.வி.குமார் சார் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட்ல கையைழுத்து போட வைச்சிட்டாரு. எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்ததுச்சு..” என்ற இயக்குநர் அருண்மோகன் கவுதம் வாசுதேவ் மேனனிடம் இயக்கம் பயின்றவர் உதவியாளர்.
‘முப்பது நாளில் படத்தோட ஷூட்டிங்கை முடிச்சாகணும் என்ற கொள்கையோடு வெறித்தனமாக இடைவெளியேவிடாமல் ஷூட்டிங் நடத்தியிருக்கிறார்கள். இந்தக் கஷ்டத்தை இயக்குநர் கஷ்டப்பட்டு அனுபவித்து சொல்ல.. இதெல்லாம் நியாயமா என்று இயக்குநருக்காக தயாரிப்பாளரிடம் கேள்வி கேட்டது மீடியா.
“நியாயமானதுங்க.. இப்படி செஞ்சாத்தான் என்னை மாதிரியான சின்ன பட்ஜெட்காரங்க தப்பிக்க முடியும். இல்லைன்னா தலைல துண்டுதான்..” என்றார் சி.வி.குமார்.
பொழைக்கத் தெரிஞ்சவரு.. இதனாலதான் 4 ஹிட்டுக்களைக் கொடுத்த பின்னாடியும் தனியா நின்னு தில்லா ஆடுறாரு..!