ச்சீ என்று வெறுப்பாகத்தான் உள்ளது. இந்த உண்மையில்லாத தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை நினைத்தால் கோபம், கோபமாகத்தான் வருகிறது..!
சொந்தக் கதையில் படத்தை எடுக்கத் தெரியாமல், அடுத்தவர் கதையில் எடுத்தாலும் அவர்களுக்குரிய மரியாதையை செய்ய வேண்டாமா..?
கடந்த வாரம் வெளியாகி நல்ல த்ரில்லர் என ரசிகர்களிடம் பெயர் பெற்றிருக்கும் ‘சரபம்’ படமும் காப்பிதானாம்.. 2003-ம் ஆண்டு ‘GAME’ என்ற பெயரில் வெளிவந்த ஜப்பானிய படத்தின் அட்டர்காப்பியாம்.. இப்போதுதான் இணையத்தில் பலரும் எழுதியிருக்கிறார்கள்.
நாமும் அந்தப் படத்தை பார்த்தோம்.. காட்சியமைப்புகள் அப்படியே ஒற்றுமையாக உள்ளன. நடிகர்கள் மட்டுமே வேறு வேறு..
தயாரிப்பாளருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை.. இயக்குநரும் தயாரிப்பாளரும் சேர்ந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை..
இத்தனை தைரியமாக வேறொருவரின் எழுத்தைத் திருடியவர்கள் எப்படி பொதுமக்களிடம் திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள் என்று கூறலாம்..? இதைச் சொல்வதற்காவது ஒரு தகுதி வேண்டாமா..? இவர்கள் செய்திருப்பதே கதை திருட்டு.. இந்தப் படத்தை நாம் திருட்டு டிவிடியில் பார்க்கக் கூடாதாம்.. காசு கொடுத்துதான் பார்க்க வேண்டுமாம்..!
வெட்கக்கேடு..!
சந்தேகமிருப்பவர்கள் கீழே உள்ள யூடியூப் லிங்க்கில் அந்த ஜப்பானிய ‘GAME’ படத்தைப் பார்க்கலாம்.