full screen background image

‘சந்தோஷத்தில் கலவரம்’ திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி வெளியாகிறது..!

‘சந்தோஷத்தில் கலவரம்’ திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி வெளியாகிறது..!

முற்றிலும் புதியவர்களின் முயற்சியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்தோஷத்தில் கலவரம்.’  

ஸ்ரீகுரு சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திம்மா ரெட்டி  வி.சி. இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில்  பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் ரவி மரியாவும் ஒரு வித்தியாசமான ரோலில்  நடித்துள்ளார். 

ஒளிப்பதிவு – பவுலியஸ். இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன்  ஷிரவன்குமாரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை – சிவநக்,  பாடல்கள் – கபிலன்,  மணி அமுதன், ப்ரியன், படத் தொகுப்பு – கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா. இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர் . 

இப்படத்தை புதுமுக இயக்குநரான கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப் படங்கள், குறும் படங்களை இபக்கியவர்.  விருதுகளும் பெற்றவர். திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர்.

1X5A7495

இப்படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும்போது, “ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்..? என்பதுதான் கதை. அதனால்தான் ‘தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல் ‘ என்று   டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம்.

இந்த உலகம் இரு வேறு சக்திகளால் இணைந்தது. பாசிடிவ் சக்திக்கும், நெகடிவ் சக்திக்கும் இடையே தினமும் போர் நடக்கிறது. இது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொருவருக்குள்ளும் நடைபெறுகிறது. இங்கே யாருக்கும் காஸ்மிக் எனர்ஜி பற்றித் தெரிவதில்லை. படித்தவர்கூட அறியவில்லை. அதன் அற்புதங்கள் எப்படி வெளியே தெரியும்..? அந்த காஸ்மிக் சக்தியை பற்றி இந்தப் படத்தில் கூறியிருக்கிறேன்.

DSC_4847

இது சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம்  என்றாலும் இதில் நட்பு, காதல், அன்பு, காமெடி, ஆன்மிகம் எல்லாம் கலந்துள்ளன. ‘உன்னையே நீ அறிவாய்’, ‘உனக்குள் இருக்கும் இறைவனை உணர்வாய்’, ‘உன் உயரம் அறிவாய்’ என உரக்கச் சொல்கிறது இத்திரைப்படம்.

எனக்கு சினிமா மீது அவ்வளவு காதல். எவ்வளவோ வேலை வாய்ப்பு, வருமானம் எல்லாவற்றையும் இழந்து விட்டு, துறந்து விட்டுத்தான் இந்த சினிமாவுக்குள் நான் வந்திருக்கிறேன். இந்தப் படத்தைப்  பல போராட்டங்களைச் சந்தித்துதான் உருவாக்கியிருக்கிறேன். 

ஆனால் படம் எடுத்ததைவிட வெளியிடுவதைத்தான்  மிகவும் சிரமமாக உணர்ந்தேன். கடைசியில் என் படத்தை நானே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். அதன்படியே வெளியிடுகிறேன். வரும் நவம்பர் 2-ம் தேதியன்று இத்திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகிறது. தமிழ் ரசிகர்கள் நிச்சயம் எனது படத்தை வரவேற்று ஆதரவளிப்பார்கள் என்று உறுதியாய் நம்புகிறேன்..” என்கிறார் தன்னம்பிக்கையோடு..!

படம் வெற்றி பெற பெரிதும் வாழ்த்துகிறோம்..!

 

Our Score