சென்ற வருடத்தில் பல படங்களில் சறுக்கிக் கொண்டிருந்த சந்தானம் தனது கேரியரை கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து இப்போது டாப் கியருக்கு ஏறும் வழியைச் செய்து கொண்டிருக்கிறார். அதில் வீரம் பெர்பெக்கட்டா வொர்க்அவுட்டானதில் பெரிய சந்தோஷத்தில் இருக்கிறாராம். அடுத்து வரக் கூடிய படங்களில் யார் மனைதையும் புண்படுத்தாத அளவுக்கு வசனம் பேசி சிரிக்க வைக்க முயற்சியெடுத்துள்ளார்.
அதற்கு வாலிபராஜா படத்தை பெரிதும் நம்பியியிருக்கிறார் சந்தானம். இதில் கதையுடன் கூடவே வரும் நகைச்சுவை டிராக்கில் பட்டையைக் கிளப்பியிருக்கிறாராம் சந்தானம். மனநல மருத்துவராக இந்தப் படத்தில் நடித்திருக்கும் டாக்டர் சந்தானம், தன் பேஷன்ட்ஸ்கிட்ட அவங்க பிரச்சனைகளின் ஒன்லைன் கேட்பார். பிடிச்சிருந்தா, ட்ரீட்மென்ட் கொடுப்பார். அப்படி ஹீரோ சேதுவின் ‘டபுள் ட்ராக்’ ஒன்லைனை கேட்டு மெஸ்ஸாகிப் போகும் சந்தானம் அவருக்கு உதவிகளைச் செய்வார். இதுவே பல சிக்கல்களை உண்டாக்க.. அதைத் தீர்க்கவும் தனது மனநல மருத்துவத்தை பயன்படுத்த படத்தின் கடைசிவரையிலும் காமெடி கலக்கல்தானாம்..
லோக்கல் காமெடியோட, கொஞ்சம் புத்திசாலித்தனமான காமெடிகளையும் இதில் சந்தானம் பண்ணியிருக்கார். படத்தில் சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குக்கும் பஞ்சமில்லையாம். ‘உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்டீன்னா.. அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’. ‘ஒரு டாக்டரால முடியாதது, ஒரு குவார்ட்டரால முடியும்’. ‘ மாடு முன்னாடி போனா முட்டும்… ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா ரெண்டயுமே மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்’…
இப்படி கேக்குறவங்களெல்லாம் சங்கம் வைச்சு, கைல கடப்பாறையைத் தூக்கிட்டு வர்ற மாதிரி பவர்புல் கமெண்ட்டுகளும் படத்துல இருக்காம்.. சூதானமப்பூ..!