‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தின் யூனிட், ரசிகர்களை நேரில் சந்திக்க தனது சுற்றுப்பயணத்தை அறிவித்திருக்கிறது.
நடிகர் சந்தானம், நடிகை ஆஷ்னா ஜாவேரி, இயக்குநர் ஸ்ரீநாத் ஆகியோர் அடங்கிய டீம் ஊர், ஊராகச் சென்று ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படத்திற்கான வரவேற்பை நேரில் கண்டுகளிக்க இருக்கிறார்கள்.
இதன்படி நாளை மே 14, புதன்கிழமையன்று வேலூரில் ‘அப்சரா’ மற்றும் ‘லட்சுமி’ தியேட்டருக்கு வருகிறார்கள்.
மேலும் நாளைக்கே திருவண்ணாமலை ‘சக்தி’ மற்றும் ‘பாலசுப்ரமணியம்’ தியேட்டர்களுக்கும் நேரில் வர இருக்கிறார்கள்.
திருவண்ணாமலையை முடித்துக் கொண்டு பாண்டிச்சேரி பறக்கும் டீம், அங்கே ‘முருகா’, ‘ராஜா’, ‘ஜீவா’ ஆகிய மூன்று தியேட்டர்களிலும் ரசிகர்களுக்கு காட்சி தர இருக்கிறார்கள்.
மே 15, வியாழக்கிழமையன்று திருச்சிக்கு விஜயம் செய்கிறார்கள்.
மே 16, வெள்ளிக்கிழமை மதுரைக்கு படையெடுக்கிறார்கள்..
மே 17, சனிக்கிழமை கோவைக்கு வருகிறார்கள்..
அதிரடி சந்தானத்தின் ரசிகர்களே.. அவரை நேரில் காண இப்படியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவிருக்கிறது.. தவற விடாதீர்கள்..!