full screen background image

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘படைத் தலைவன்’ துவங்கியது.

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘படைத் தலைவன்’ துவங்கியது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘படைத்தலைவன்’ இன்று துவங்கியது.

ஸ்டார் சினிமாஸ் முகேஷ்.T செல்லையா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயாகியாக அறிமுக நாயகி தாரணிகா நடிக்கிறார். நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். 

கலை இயக்கம் – சரவணன், ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியெம். இப்படத்தினை ‘சீமராஜா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘எம்ஜிஆர் மகன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீகெளமாரியம்மன் திருக்கோவிலில் இன்று காலையில் நடந்தது. உடனேயே பெரியகுளம் பகுதியில் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் தொடங்கியது.

Our Score