சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரித்து வரும் படம் ‘சண்டி முனி’.
இந்தப் படத்தில் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மற்றும் வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், ‘கோவை’ ஈஸ்வரி, விசித்திரன், ‘காதல்’ சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபி பாபு, விஜய் பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, ‘லொள்ளு சபா’ பழனி, மேட்டூர் சேகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – செந்தில் ராஜகோபால், இசை – A.K.ரிஷால் சாய், பாடல்கள் – வ.கருப்பன், கலை இயக்கம் – c.முத்துவேல், நடன இயக்கம் – ராதிகா, லாரன்ஸ், சிவா, சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், படத் தொகுப்பு – புவன், தயாரிப்பு நிர்வாகம் -முருகன் குமார், தயாரிப்பு மேற்பார்வை – N.R.குமார், தயாரிப்பு – D.சிவராம்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ‘மில்கா’ செல்வகுமார்.
இந்தப் படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கும் சிலையும் அமைக்கப்பட்டது. முப்பது அடி உயர சிலை அமைக்கப்பட்டு அதன் முன் நாயகி மனீஷா யாதவ் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது.
பக்தி ரசம் சொட்டும்வகையில் எழுதப்பட்ட பாடலுக்கு பல நடனக் கலைஞர்கள் நடனமாடினார்கள்.
“பெரும் கோபக்காரா
எங்க சண்டி வீரா
தொல்லை தீர்க்க வாடா..
ஆவி ஓட்ட வாடா…” என்ற பாடலுக்கான நடனக் காட்சி படமாக்கப்பட்டது.
இந்த நடனக் காட்சியில் 40 நடன கலைஞர்கள் 300-க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். இந்த நடனத்தை பிரபல நடன இயக்குநர் அசோக் ராஜா இயக்கம் செய்தார். இதே பாடல் காட்சியில் பக்தர்கள் பக்திப் பெருக்குடன் தீ மிதிக்கும் காட்சிகளும், வேண்டுதலுக்காக ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.
படம் பற்றி இயக்குநர் ‘மில்கா’ செல்வக்குமார் பேசுகையில், “இது ஒரு ஹாரர் படம்.. நட்ராஜ் – மணீஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குல தெய்வத்தை வழிபடும் காட்சிதான் படமாக்கப்பட்டது. யோகி பாபு காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார்… தற்போது படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. பழனி கொடைக்கானல் நெய்க்காரன்பட்டி பொள்ளாச்சி வால்பாறை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றுள்ளது…” என்றார்.










