2004-ம் ஆண்டு திரைக்கு வந்து பலராலும் பாராட்டப்பட்ட -காமராஜ்- திரைப்படம் இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. காமராஜ் வேடத்தில் பிரதீப் மதுரம் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் சாருஹாசன், வீ.எஸ்.ராகவன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்போது காமராஜ் திரைப்படம் புதிய டிஜிட்டல் தொழிற் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டதுடன் மேற்கொண்டு முப்பது நிமிடங்களுக்கான கூடுதல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
இந்தக் கூடுதல் காட்சிகளில் இயக்குநர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட தியாகியின் மகன் வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் விரைவில் படமாக்கப்படவுள்ளது.
எம்.எம்.ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
எடிட்டிங் – வி.டி.விஜயன்
கலை – ஈஸ்வர்
தயாரிப்பு – ரமணா கம்யூனிகேசன்ஸ்
எழுத்து – இயக்கம் – பாலகிருஷ்ணன்
புதுப் பொலிவுடன் ‘காமராஜ்’ படம் காமராஜரின் 112 வது பிறந்த நாளான 11.07.2014 அன்று இந்தியா முழுவது திரையிடப்பட உள்ளதாக இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.