ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியா..? – சக நடிகைகள் கோபம்..!

ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியா..? – சக நடிகைகள் கோபம்..!

விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கும் புதிய திரைபடத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆர்யா, விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார். வில்லன் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகையை வலை வீசித் தேடி வருகிறது படக் குழு.

இப்போதைக்கு சமீரா ரெட்டியிடம் இது பற்றித் தயாரிப்பாளர் பேசி வருவதாகத் தகவல். இந்தச் செய்தியறிந்து கோடம்பாக்கத்தில் பல நடிகைகள் கோபத்தில் உள்ளனர்.

காரணம், சமீரா ரெட்டி திருமணமானவர். 2 குழந்தைகளுக்குத் தாய். அதிலும் அவருடைய 2-வது குழந்தை பிறகு ஒரு வருடம்கூட ஆகவில்லை.. “நாங்களெல்லாம் இவ்வளவு பேர் இன்னமும் திருமண வயதைத் தாண்டியும் நடிப்பின் மீதுள்ள ஆசையால் இங்கயே சுற்றி வருகிறோம். எங்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்காமல், சமீரா ரெட்டியை தேடிப் போவதெல்லாம் நியாயமா…?” என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.

தயாரிப்பாளரைக் கேட்டால் அவர் ஒரு கதை சொல்கிறார். “அந்தப் படத்தின் கதையின்படி ஆர்யாவின் மனைவி கதாபாத்திரம் அவரைவிட வயதில் மூத்தவராகவும், தோற்றத்தில் மூத்தவராகவும் இருக்க வேண்டும். அதற்காகத்தான் அவரை அப்ரோச் செய்திருக்கிறோம்…” என்கிறார்.

சமீரா ரெட்டி இதுவரையிலும் தமிழில் ‘வாரணம் ஆயிரம்’, ‘அசல்’, ‘வெடி’, ‘வேட்டை’, ‘நடுநசி நாய்கள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஏற்கெனவே சமீரா ரெட்டி ஆர்யாவுடன் ‘வேட்டை’ படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து சமீரா இன்னமும் தன்னுடைய இறுதியான முடிவைச் சொல்லவில்லையாம். அதுவரையிலும் முயற்சி செய்ய நினைப்பவர்கள் செய்யலாம்..!

Our Score