‘சலீம்’ படத்தின் 2-ம் பாகத்தின் தலைப்பு ‘மழை பிடிக்காத மனிதன்’

‘சலீம்’ படத்தின் 2-ம் பாகத்தின் தலைப்பு ‘மழை பிடிக்காத மனிதன்’

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’  திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச் சிறப்பான  ஒரு திரைப்படமாகும்.

விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மிகச் சிறப்பான திரைக்கதைக்காகவும், உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது இத்திரைப்படம்.

தற்போது விஜய் ஆண்டனி இந்த ‘சலீம்’ படத்தின் அடுத்த பாகமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

ந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.B, பங்கஜ் போஹ்ரா, மற்றும்  S.விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து INFINITI FILM VENTURES நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார். கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படத்தின் மூலமாகத் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.

மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலை வாசல்’ விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, ஒளிப்பதிவும் செய்கிறார் விஜய் மில்டன். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார். படத் தொகுப்பாளராக லியோ ஜான்பால், கலை இயக்குநராக K.ஆறுசாமி, சண்டை இயக்குநராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குநராக ஸ்ரீதர், ஸ்டில்களை மகேஷ் ஜெயச்சந்திரன், விளம்பர வடிவமைப்பாளராக பவன் (சிந்து கிராபிக்ஸ்), ஆடை வடிவமைப்பாளராக ஷிமோனா ஸ்டாலின் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல்முறையாக தாமன் & தியூ பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது, 2022-ம் ஆண்டு மத்தியில் இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர்.

Our Score