கோடம்பாக்கத்தில் இப்போது படத்தின் பிரமோஷனுக்காக இயக்குநர்கள் விதம்விதமாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
‘நான்’ என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘சலீம்’ படத்தின் விளம்பரத்திற்காக வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார் அதன் இயக்குநர்.
‘சலீம்’ என்ற பெயருடையவர்கள் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியை இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் ஜூன் 5-ம் தேதியன்று சத்யம் தியேட்டரில் நேரில் சந்திக்கலாம் என்று அழைத்துள்ளார்கள்.
இந்தப் பதிவை வாசிக்கும் நீங்கள் ‘சலீமாக’ இருந்தால் உங்களுடைய விலாசம், தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். இதில் தேர்வு பெறுபவர்கள் விஜய் ஆண்டனியுடன் அன்றைய இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மெயில் முகவரி : salimmeetssalim@gmail.com