பிருத்விராஜன் வில்லனாக நடிக்கும் ‘சகா’ திரைப்படம்

பிருத்விராஜன் வில்லனாக நடிக்கும் ‘சகா’ திரைப்படம்

செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத் தயாரிப்பில், பல முன்னனி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் முதன்முறையாக இயக்கும் படம் ‘சகா’.

இந்தப் படத்தில் இயக்குனர் மணிரத்னம் அவர்களால் ‘கடல்’ படத்தில் அறிமுகபடுத்தப்பட்ட சரண் மற்றும் ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் ஸ்ரீராம், பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர் பாண்டியராஜனின் மகனான நடிகர் ப்ரித்விராஜ் முதன்முறையாக இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக பலக் மற்றும் நீரஜா நடித்துள்ளனர்.

நிரன் சந்தர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத் தொகுப்பு ஹரிஹரன் மற்றும் கலை இயக்கம் ராஜு. சிங்கப்பூரை சேர்ந்த ஷபீர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை பற்றி இயக்குநர் முருகேஷ் கூறுகையில், "இந்த ‘சகா’ திரைப்படம் குற்றம் செய்து சிறையில் உள்ள இளைஞர்கள் புதிய வாழ்வை அடைய துடிக்கும் அவர்களுக்கு வரும் தடைகளையும், அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் அப்பட்டமாக அப்படியே காட்டியுள்ளோம்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளரான ஷமீர், 12 வயது முதலே இசையை கற்ற்றிந்தவர். சிங்கப்பூரில் பல இசை விருதுகளை வென்று பிரபல இசையமைப்பாளராக திகழ்கிறார்.  ‘அலைபாயுதே’, ‘டிராபிக்’, ‘ஸ்வாசம் – செண்ட்ஸ் ஆஃப் ப்ரோஸ்’ ஆகிய இசை ஆல்பம்களை வெளியிட்டு சிங்கப்பூரில் பெரும் இசைப் புரட்சியை செய்து பலரது மனதை வென்றுள்ளார். இவருடைய இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறந்த முறையில் வந்துள்ளன, இந்த வருடத்தின் சிறந்த பாடல்கள் வரிசையில் ‘சகா’ படத்தின் பாடல்கள் கண்டிப்பாக முன்னனியில் இருக்கும்.." என்று கூறினார்.

சென்னை, பாண்டிசேரி, நாகப்பட்டினம், கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேஷ் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது ‘சகா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெறவுள்ளது.