அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் V.S. சசிகலா பழனிவேல் தயாரித்திருக்கும் புதிய படம் ‘சாயா’.
புதுமுகம் சந்தோஷ் கண்ணா ஹீரோவாகவும் ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் நடித்த காயத்ரி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சோனியா அகர்வால், விஜயசாந்தி இடத்தை நிரப்பும் அளவுக்கு கண்டிப்பான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
Y.G.மகேந்திரன் தந்தையாகவும், பாய்ஸ் ராஜன் தலைமையாசிரியராகவும் நடித்திருக்கிறார்கள். பஞ்சாயத்தார்களாக ஆர்.சுந்தர்ராஜனும், பயில்வானும் கலக்கி உள்ளார்கள். மேலும், நெல்லை சிவா, மனோகர். பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா, கொட்டாச்சி வில்லன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை – ஜான் பீட்டர், சண்டை பயிற்சி – பவர் பாஸ்ட், நடனம் – ரமேஷ் கமல், மக்கள் தொடர்பு – ஏ.ஜான், தயாரிப்பு மேற்பார்வை -மதுபாலன், தயாரிப்பு நிர்வாகம் – ஆத்தூர் ஆறுமுகம், தயாரிப்பு – V.S. சசிகலா பழனிவேல், கதை, இயக்கம், பாடல்கள், பின்னணி இசை – V.S. பழனிவேல்.
“சாயா’ படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒரு முறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின்அவசியம் புரியும்.
பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து உருவாகியுள்ளது ’சாயா’.
ஆத்மா என்பது எப்படிப்பட்டது..? ஒரு மனிதன் இறந்த பின் அவன் ஆத்மா அவனது உடலை பார்க்க முடியுமா..? பார்த்தால் என்ன செய்யும்..? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் ‘சாயா’ படம் ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. ஆத்மா விட்ட சவாலை மாணவியின் ஆத்மா ஜெயித்துக் காட்டியதா..? என்பதற்கான விடை படத்தில் இருக்கிறது..” என்கிறார் படத்தின் இயக்குநரான V.S. பழனிவேல். இவரே படத்திற்கு கதை, பாடல்களை எழுதி, பின்னணி இசையையும் கவனித்திருக்கிறார்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து அறுபது நாட்களுக்கு மேல் வேலை செய்து வருகின்றனர். நவம்பர் வெளியீடாக வெளிவரவிருக்கிறது ‘சாயா’ திரைப்படம்.









