full screen background image

விஜய் விஷ்வா நாயகனாக நடிக்கும் ‘சாதுவன்’ திரைப்படம்.!

விஜய் விஷ்வா நாயகனாக நடிக்கும் ‘சாதுவன்’ திரைப்படம்.!

பவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதா முருகன் தயாரித்துள்ள திரைப்படம் ‘சாதுவன்.’

இந்தப் படத்தில் விஜய் விஷ்வா நாயகனாகவும், கதாநாயகியாக ராஷ்மிதா, கலையரசன், காசி, சக்திவேல், ராஜேஷ் ரமணி, இளங்கோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் சேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது முதல் படமாக இதை இயக்கி உள்ளார். ஆர்.பி.செல்வகுமாரவர்மா ஒளிப்பதிவையும், கேசவன் நடன பயிற்சியையும், வீறு விஜய் சண்டை பயிற்சியையும், ஆதிஷ் உத்ரியன் பின்னணி இசையையும் கவனித்துள்ளனர். பாடல்கள், இசை –  சதா முருகன், பத்திரிக்கை தொடர்பு – விஜய் முரளி. 

இந்த ‘சாதுவன்’ படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் சேகரன் பேசும்போது, “வாழ்க்கையை வெறுத்து சாவைத் தேடி பயணிக்கும் கதாநாயகனைப் பற்றி, ஓர் இரவில் நடைபெறும் திரில்லான, திகிலும் பரபரப்பும் நிறைந்த திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாக மக்கள் ரசிக்கும் வண்ணம் இயக்கியிருக்கிறேன்” என்றார்.

இதன் முழு படப்பிடிப்பும் பாண்டிச்சேரி, கடலூர், ஈரோடு, ஏற்காடு போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

Our Score