full screen background image

கீர்த்தி சுரேஷ்-செல்வராகவன் நடித்த ‘சாணிக் காயிதம்’ படம் ஓடிடியில் வெளியாகிறது..!

கீர்த்தி சுரேஷ்-செல்வராகவன் நடித்த ‘சாணிக் காயிதம்’ படம் ஓடிடியில் வெளியாகிறது..!

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில்  உருவாகியிருக்கும் சாணிக் காயிதம்’ திரைப்படம் வரும் மே 6-ம் தேதி அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் இருவரும் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இயக்குநர்  அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

பொன்னி(கீர்த்தி சுரேஷ்) மற்றும் அவளது குடும்பத்தினருக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது,  தலைமுறை, தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத் தொடங்கும்போது,  விளம்பர முன்னோட்ட காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன்) இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார். இதனை சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

த்தமிழ் திரைப்படம் பிரத்யேகமாக  மே 6-ம் தேதி அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது,  இத்திரைப்படம் தெலுங்கில் சின்னி- Chinni-என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணிக் காயிதம்’ என்ற பெயரிலும்  ஒளிபரப்பாகிறது.

இந்தப் படம் குறித்து  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பேசும்போது, “பழி வாங்கும் குறிக்கோளோடு பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது. பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் கருப் பொருளோடு பின்னிப் பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக் களம் இப்படத்தில்  அமைந்துள்ளது.

இந்த ‘சாணிக் காயிதம்’ மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக் கொள்ளை கொள்ளும்  வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப் போடும்.

வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க் கூச்செறியும் வகையில்  மாறுபட்ட வடிவத்தில் சொல்லியிருக்கிறேன்..” என்றார். 

 
Our Score