full screen background image

‘சாலையோரம்’ திரைப்படம் – இதுவரையிலும் யாரும் தொடாத கதையாம்..!

‘சாலையோரம்’ திரைப்படம் – இதுவரையிலும் யாரும் தொடாத கதையாம்..!

முருகன் சுப்பராயனுடன், டாக்டர் செல்வ தியாகராஜன் இணைந்து ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் ‘சாலையோரம்’.

இதில் ராஜ் ஹீரோவாகவும், செரினா ஹீரோயினாகவும் அறிமுகமாகியிருக்கின்றனர். வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் நடித்திருக்கிறார். மற்றும் சிங்கம்புலி, முத்துக்காளை, ‘லொள்ளு சபா’ மனோகர், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

தினேஷ் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்ய, செல்வராஜா படத்தொகுப்பு செய்திருக்கிறார். சிங்கப்பூரில் இருக்கும் சேதுராம் என்ற புதியவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். யுகபாரதி, பிரான்சிஸ் கிருபா, தனிக்கொடி, இவர்களுடன் இயக்குநர் மூர்த்தி கண்ணனும் இணைந்து பாடல்களை எழுதியிருக்கின்றனர். பி.வாசுவிடம் உதவி இயக்குநராக இருந்த க.மூர்த்தி கண்ணன் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “கேட்டதெல்லாம் கிடைக்கும் வசதியான வாழ்க்கையைப் பெற்ற ஒரு பெண், தனக்குக் கிடைக்காத ஒன்றைக் காதலிக்கிறாள்.  எந்தப் பெண்ணும் நினைத்துப் பார்க்காத அந்த ஒன்று அவளுக்குக் கிடைத்ததா..? அது என்ன..? என்பதுதான் படத்தின் கதைக்களம். இதுவரையில் இந்திய சினிமாவில் யாருமே எடுத்துக் கொள்ளாத ஒரு விஷயத்தை இதில் கையாண்டிருக்கிறாராம் இயக்குநர். சிறந்த பொழுது போக்கான திரைக்கதையில் வித்தியாசமான முயற்சியும்கூட..” என்கிறார்.

Our Score