பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள திரைப்படம் ‘சாலா.’ இத்திரைப்படம் ரஸ்டிக் & ரியலிஸ்டிக் திரில்லராக உருவாகியுள்ளது!
இத்திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் தீரன் இந்தப் படத்தில் சாலமன் (எ) சாலாவாக நடித்துள்ளார். கதைப்படி அவர் தனது 30 வயதின் முற்பகுதியில், 6 பார்களை சொந்தம் கொண்டாடுபவனாக, முரட்டுத்தனமானவனாக இருக்கிறான். மேலும் குணா என்ற பெரியவரின் நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறான்.
அறிமுக நடிகையான ரேஷ்மா கதாநாயகியாக புனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 25 வயது சமூக ஆர்வலராகவும், மதுப் பழக்கத்தை கடுமையாக எதிர்க்கும் பள்ளி ஆசிரியையாகவும் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வில்லனாக சார்லஸ் வினோத் மற்றும் ஸ்ரீநாத், அருள்தாஸ் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – S.D.மணிபால், ஒளிப்பதிவு – ரவீந்திரநாத் குரு, இசை – தீசன், கலை இயக்கம் – வைரபாலன், படத் தொகுப்பு – புவன், சண்டை பயிற்சி இயக்கம் – மகேஷ் மேத்யூ, ‘ரக்கர்’ ராம், நடன இயக்கம் – நோபல் பால், உடைகள் – நாகு, ஒலி வடிவமைப்பு – லட்சுமி நாராயண ஏ.எஸ்., வி.எஃப்.எக்ஸ். – டி நோட் மூர்த்தி, கலரிஸ்ட் – ஆர்.நந்தகுமார், தயாரிப்பு நிர்வாகம் – வே.கி.துரைசாமி, இணை இயக்கம் – எஸ்.ஏ.பொன்மல்லன், ஒப்பனை – ஹரி பிரசாத், புகைப்படங்கள் – ரஞ்சித், கண்டெண்ட் ஹெட் – சத்ய பாவனா காதம்பரி, பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன், விளம்பர வடிவமைப்பு – ஜோசப் ஜாக்சன், தயாரிப்பு – டி.ஜி.விஸ்வ பிரசாத், பேனர் – மக்கள் மீடியா ஃபேக்டரி, இணை தயாரிப்பு – விவேக் குச்சிபோட்லா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வி.ஸ்ரீ.நட்ராஜ், தமிழ்நாடு வெளியீடு: டிரைடென்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன்.
இப்படத்தை S.D.மணிபால் எழுதி இயக்கியுள்ளார். இவர் ’தொடரி’, ’கும்கி-2’, மற்றும் ‘காடன்’ போன்ற படங்களில் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
இந்த ‘சாலா’ திரைப்படம் ஒரு தனித்துவமான மற்றும் அழுத்தமான கதையைக் கொண்டுள்ளது. மதுப் பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து இப்படம் பேசுகிறது. குடியினால் ஏற்படும் பிரச்சினைகளைக் காண்பிப்பதன் மூலம் பார்வையாளர்கள் மத்தியிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது.
ஒரு ஒயின் ஷாப்பை குத்தகைக்கு எடுக்கும் பிரச்சினையில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதல் மற்றும் அதன் பின்னான பகை ஆகியவற்றைச் சுற்றி இந்தப் படத்தின் கதை பரபரப்புடன் நகர்கிறது.









