திரிஷாவுக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகணும்னு அவங்க அம்மாவைவிட அதிகமா கவலைப்படறது மீடியாதான்..
எத்தனை தடவைதான்.. யார்கூடத்தான் இணைத்து எழுதுறது..? எழுதி, எழுதி போரடிச்சுப் போய் சோர்ந்து போகும்போது திடீர்ன்னு இன்னொரு செய்தியை கிளப்பி விடுறாங்க.. இதாச்சும் நிலைக்குமான்னு தெரியலையேன்னு யோசிக்கும்போது அது புஸ்ஸாகிவிடும்..
இன்றைக்கு மீ்ண்டும் திரிஷாவின் திருமணச் செய்தி..
Radiance Media Group Company-யின் உரிமையாளர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு நிச்சயத்தார்த்தம் நடந்திருப்பதாக ஒரு செய்தி கிளம்பியிருக்கிறது. இந்த வருண் மணியன் சென்ற ஆண்டு தனது நண்பர் சசிகாந்துடன் இணைந்து ‘வாயை மூடி பேசவும்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். மேலும் இப்போது ‘காவியத் தலைவன்’ படத்தையும் தயாரித்திருக்கிறார்.
இந்த நேரத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிக்கும் புதிய படத்தை இவர் தயாரிக்கவுள்ளார்.
இந்த நேரத்தில் இந்த செய்தி எப்படி கிளம்பியது என்று தெரியவில்லை. சில ஆங்கில செய்தி இணைய இதழ்களில் இது பற்றிய புகை கிளம்பியதுதான் இன்றைய ஸ்பெஷல்.
இது தொடர்பான இந்த ஒரு ட்வீட்டரை வைத்துத்தான் இந்தச் செய்தி இணையவுலகைச் சுற்றி வருகிறது..!