YSIMY புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘ரூல் நம்பர்-4.’
இந்தப் படத்தில் ஏ.கே.பிரதீஸ் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன் மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ், கலா பிரதீப் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் – ஷிமி இஸட், இணை தயாரிப்பு – ஏ.குமரபிள்ளை, கிரண் மேலவீட்டிள், தேவராஜன் பிள்ளை, எழுத்து, இயக்கம் – பாஸர், ஒளிப்பதிவு – டேவிட் ஜான், பாடல் இசை – கெவின் டெகாஸ்டா, பின்னணி இசை – தீரஜ் சுகுமாறன், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, நடன இயக்கம் – அஜய் காளிமுத்து, சண்டை பயிற்சி இயக்கம் – ராக் பிரபு, பத்திரிக்கை தொடர்பு – பா.சிவக்குமார்.
ஏ.டி.எம். வேன் டிரைவராக பணிபுரிகிற கதாநாயகன் தமிழுக்கு, ஏ.டி.எம். செக்யூரிட்டியின் மகள் மீது காதல் உருவாகி, நாட்கள் நல்லபடியாய் நகர்கிறது. அந்த நிலையில் ஒருநாள் ஏ.டி.எம். வேனை கொள்ளையடிக்க ஒரு தரப்பினர் திட்டமிடுகிறார்கள். இந்தக் கடத்தல் ஆபரேஷனில் வேன் டிரைவரான கதாநாயகனின் காதலியும், கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள்.
இதன் பின் என்ன நடக்கிறது.. நாயகியையும், அந்தக் கர்ப்பிணி பெண்ணையும் நாயகன் காப்பாற்றினானா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
காடு, ஊழல்வாதிகள், நேர்மையற்ற காட்டிலாக்கா அதிகாரிகள் என காட்சிகளை பரபரப்புக்கு பஞ்சமில்லாதபடி அமைத்திருக்கிறார்கள்.
விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி ஆக்சன், அட்டகாசமான சென்டிமென்ட் என உருவாகியுள்ள இந்த ‘ரூல் நம்பர் 4’ திரைப்படம், வரும் நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனத்தின் சார்பில் பிரபல விநியோகஸ்தரான ஜெனிஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.









