‘ருத்ரன்’ படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல் ரீமிக்ஸ் ஆகியுள்ளது

‘ருத்ரன்’ படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல் ரீமிக்ஸ் ஆகியுள்ளது

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் ‘ருத்ரன்’ படத்தில் ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர்  நடிக்கின்றனர். மேலும் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு –  5 Star கிரியேஷன்ஸ், இசை – G.V.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM), கதை, திரைக்கதை – K.P.திருமாறன், இயக்கம் – 5 ஸ்டார் S.கதிரேசன்.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன்’ படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ்ரீதர் பணியாற்றியுள்ளார்.

ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 
Our Score