full screen background image

‘ரு’ – ஓரெழுத்து வித்தியாசமான தலைப்புடன் தமிழ்ச் சினிமா..!

‘ரு’ – ஓரெழுத்து வித்தியாசமான தலைப்புடன் தமிழ்ச் சினிமா..!

கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு எல்லைக் கோட்டை தமிழ்த் திரையுலகில் கொண்டு வர வேண்டும். வியாபார நுணுக்கங்கள் கொண்ட சினிமாவிலும் எப்படி வேண்டுமானாலும் தலைப்பு வைக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் கதையை அமைக்கலாம் என்பதை தங்களது கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொண்டுள்ளனர் இப்போதைய இயக்குநர்கள்.

இது தொழில் ரீதியாக சினிமாவை பாதிக்கிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. சில புரியாத தலைப்புகளாலும், அர்த்தமற்ற தலைப்புகளாலும் சிறந்த கதைகளுடன் வெளி வரும் படங்கள்கூட அடிபட்டு போய்விடுகின்றன. இதை இந்த இயக்குந சிகாமணிகள் எப்போது உணரப் போகிறார்கள்..?

இதோ இன்னொரு தமிழ்ச் சினிமாவுக்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள் ஒற்றை வரியில் ‘ரு’ என்று..!

‘ரு’ என்ற தமிழ் எழுத்துக்கு ஐந்து என்று ஒரு அர்த்தம் உண்டாம். இதிகாசம் முதல் சமீப காலம்வரையிலும் ஐந்து என்ற எண் மிகவும் முக்கியத்துவம் உள்ள எண்ணாகவே பார்க்கப்படுகிறது.

சமூகத்தில் வாழ கூடாத, வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட விழைகிறான் ஒரு இளைஞன். சினிமாவில் நாயகனாக வர  கனவு காணும் அவன், நிஜ வாழ்வில் நாயகனாக ஆகிறானா என்பதை அந்த ஐந்து பேர்தான் தீர்மானிக்கின்றனர்.

சர்வதேச அரங்கில் நமது நாட்டை தலை குனிய வைக்கும் ஒரு மிக பெரிய சமூக அவலத்தை படம்  பிடித்து காட்டும்  இந்த ‘ரு’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது.

தொலைக் காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி இன்று திரையுலகில் காலூன்றி நிற்கும் இர்பான் ‘ரு’ படத்தின் கதாநாயகன் ஆவார்.  ரக்சிதா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஆதரவன், பேரரசு, ரவி, மீரா கிருஷ்ணன், அவினாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

                
Technicians
  • Director – Sadasivam
  • DOP – Naveen Kumar
  • Music Director – Srinath
  • Editor – L.V.K.Doss
  • Art Director – Badri
  • Lyric Writer – Nyagarvel, Madhankumar
  • Choreographer – Robert , Joymathi
  • Stunt – Kungfu Chandru
Our Score