பி.வாசு இயக்கத்தில் நாகார்ஜுனா – மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‘ரவுடி மாப்ளே’

பி.வாசு இயக்கத்தில் நாகார்ஜுனா – மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‘ரவுடி மாப்ளே’

பல மொழி மாற்றுப்  படங்களைத் தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம், மீடியாவின் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இன்னைந்து தயாரிக்கும் படம் ‘ரவுடி மாப்ளே.’

தெலுங்கில் ‘கிருஷ்ணா – அர்ஜுனா’ என்ற பெயரில் வெளியான படமே ‘ரவுடி மாப்ளே’ என்று மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

இதில் நாகார்ஜுனா – விஷ்ணு இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் நடித்திருக்கிறார். மற்றும் நாசர், நெப்போலியன், மனோரமா, பிரம்மானந்தம் புவனேஸ்வரி நடித்திருக்கிறார்கள்.

இசை – மரகதமணி வசனம் – E.M.S. ராஜா, பாடல்கள் – தேன்மொழியான், ஸ்டண்ட்   –  ஸ்டண்ட் சிவா, எடிட்டிங்   –  பாலு, எழுத்து-இயக்கம் –  பி.வாசு.

சடங்குக்காக அப்பாவி ஒருவனுக்கு அழகான பெண் ஒருத்தியை திருமணம் செய்து வைக்கிறார்கள். அதில் ஏற்பட்ட பிரச்னை, அதன் முடிவு என்ன என்பது பரபரப்பான திரைக்கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. பக்கா கமர்ஷியல் படமாக ‘ரவுடி மாப்ளே’ உருவாகி உள்ளது. படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

Our Score