full screen background image

ரஜினி வெளியிட்ட ‘ரூட்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

ரஜினி வெளியிட்ட ‘ரூட்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

வெரஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ (ROOT – Running Out of Time)

கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக அபார்ஷக்தி குரானா அறிமுகமாகிறார். இவர்களுடன் பாவ்யா திரிகா, ஒய்.ஜி.மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘ரூட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் சூரியபிரதாப், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘கோச்சடையானில்’ துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரன் ரே இசையமைத்திருக்கிறார். ஜான் அபிரகாம் படத்தொகுப்பு செய்ய, ஜகன் நந்தகோபால் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அறிவியல், கிரைம் த்ரில்லருடன், ஆழமான உணர்வுகளையும் இணைத்து, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகளில் இருக்கிறது. 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார். இந்த தருணம் படக் குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது.

‘ரூட்’ படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த ரஜினிகாந்த், படக் குழுவை பாராட்டியதோடு, படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.  இந்த சந்திப்பு படக் குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. 

Our Score