full screen background image

‘டியர்’ படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது..!

‘டியர்’ படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது..!

Nutmeg Productions  தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘டியர்’ படத்தின் வெளியீட்டு உரிமையை  தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக் பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ளது ரோமியோ பிக்சர்ஸ்.

‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விஷேசம்’, ‘டிரிக்கர்’, ‘துணிவு’, ‘டைனோசர்ஸ்’ போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களை இந்நிறுவனம் விநியோகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘டியர்’ படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

இந்த டியர் படத்தினை Nutmeg Productions நிறுவனத்தின் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத் தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு, ஏகாதசி, ஜி.கே.பி., விண்ணுலக கவி ஆகியோர்  பாடல்கள்  எழுதியுள்ளனர்.

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநரான ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘இசை மன்னன்’ ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவில் அதிகரித்துள்ளது.  

‘டியர்’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது.

படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Our Score