மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் லஷ்மன் இயக்கத்தில் ஜெயம்ரவி – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘ரோமியோ ஜுலியட்’ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று 14.04.2014 காலை அடையாரில் உள்ள கோவிலில் நடைபெற்றது.
இயக்குநர் லஷ்மண், எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பதால் குருவை அழைத்து ஷூட்டிங்கை துவக்கி வைக்கச் சொல்லியிருந்தார். அதுபோல் எஸ்.ஜே.சூர்யா கிளாப் போர்டை அடித்து இந்தப் படத்தி்ன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
Our Score










