full screen background image

“ஆர்.கே.செல்வமணி எழுத்தாளர் சங்கத்தில் போர்ஜரி செய்தார்”-இயக்குநர் கே.பாக்யராஜ் குற்றச்சாட்டு..!

“ஆர்.கே.செல்வமணி எழுத்தாளர் சங்கத்தில் போர்ஜரி செய்தார்”-இயக்குநர் கே.பாக்யராஜ் குற்றச்சாட்டு..!

2022 – 2024 ஆண்டுக்கான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்தலில் இயக்குநர் இமயம்’ பாரதிராஜா ஆசியுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவும் போட்டியிடுகிறது.

இமயம் அணி சார்பில்

K.பாக்யராஜ் – தலைவர்

ரா. பார்த்திபன் – செயலாளர்

வெங்கட் பிரபு – பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

இணை செயலாளர் பதவிகளுக்கு, A.ஜெகதீசன், R.ஜெனிஃபர் ஜீலியட், ராஜா கார்த்திக் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு, மங்கை அரிராஜன், பாலசேகரன், K.P.ஜெகன், நாகேந்திரன், KBB.நவீன், R.பாண்டியராஜன், வி. பிரபாகர், சசி, R.ஷிபி, S.S.ஸ்டேன்லி, சாய் ரமணி, வேல்முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த அணியிலிருந்து துணைத் தலைவர்கள் பதவிக்கு… R.மாதேஷ், எழில் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

இவர்களின் அறிமுக விழா நேற்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் வேட்பாளர்கள் அனைவரையும் இயக்குநர் R.சுந்தர்ராஜன் பத்திரிகை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் K.பாக்யராஜ் பேசும்போது, “எங்கள் இமயம் அணி’ இன்று அறிமுகமாவது மகிழ்ச்சி. பத்திரிக்கை நண்பர்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு இருப்பதில்  மகிழ்ச்சி.

உதவி இயக்குநர்கள் மற்றும், இயக்குநர்களுக்கு என்னென்ன சிக்கல்கள் கஷ்டங்கள் உள்ளது என குழுவாக விவாதித்தே இந்த வாக்குறுதி அறிக்கையை உருவாக்கினோம். பெயருக்காக இல்லாமல் வெற்றி பெற்றவுடன் இதில் அறிவித்துள்ள அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்ற, முழுமையான அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஜெகன் பேசியதில் ஒன்றை மறுக்கிறேன். “இந்த டீம் ஜெயித்தால் சங்கத்திற்கு நல்லது. இல்லாவிட்டால் எங்களுக்கு நல்லது…” என்றார். ஆனால், நாங்கள் இங்கு ஜெயிக்கத்தான் வந்திருக்கிறோம். நல்லது செய்யத்தான் வந்துள்ளோம்.

நாங்கள் பெரிய வாக்குறுதிகள் தரவில்லை. மீன் பிடிக்க தூண்டில் மட்டுமே தருவோம். பிழைத்து கொள்வது உங்கள் சாமர்த்தியம். யாரையும் குற்றம் சொல்ல வரவில்லை.

இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தபோது “செல்வமணியுடன் போட்டி வேண்டாம்” என பலர் பயமுறுத்தினார்கள். ஆனால் எல்லாவற்றையும் சந்திக்க முடிவு பண்ணியே இந்தத் தேர்தலில் இறங்கியுள்ளேன்.

‘சர்க்கார்’ பட விசயத்தில் அந்த இணை இயக்குநர் ராஜேந்திரன் யாரென்றே தெரியாது. ஆனால் அவர் எழுத்தாளர் சங்கத்துக்கு வந்து பிரச்சனை என்று சொன்னபோது குழுவில் இருக்கும் எல்லோரிடமும் கலந்து ஆலோசித்தேன். முருகதாஸையே வீட்டுக்கு கூப்பிட்டு பேசிய பிறகு, செல்வமணி “அது வேற கதை; இது வேற கதை…” என்றார். அங்குதான் எனக்கும் அவருக்கும் முதல் பிரச்சனை ஆரம்பித்தது.

அந்தப் பிரச்சனையில் செல்வமணி போர்ஜரி செய்தார். நான் எடுத்த நடவடிக்கையில் பிறகு காம்ப்ரமைஸ் ஆனார்கள். நான் இருந்த சங்கத்திலேயே அவரால் போர்ஜரி நடத்த முடிகிறது எனும்போது, அவர் தலைவராக இருக்கும் சங்கத்தில் என்னென்ன செய்திருப்பார்? அதனால்தான் இந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். இந்த தேர்தலில் கண்டிப்பாக எங்கள் அணி ஜெயிக்கும். எங்களுக்கு ஆதரவு தாருங்கள்…” என்றார்.

பின்னர் ‘இமயம் அணி’ சார்பிலான 18 வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பத்திரிக்கை இயக்குநர் கே.பாக்யராஜ் தனது சக இயக்குநர்களுடன் இணைந்து வெளியிட்டார்.

Our Score