full screen background image

வயதான பெண்களாலும் சைட் அடிக்கப்படும் நடிகர் நிவின் பாலி..!

வயதான பெண்களாலும் சைட் அடிக்கப்படும் நடிகர் நிவின் பாலி..!

எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிச்சி’.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளார். வரும் டிசம்பர் 8-ம் தேதி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பிரமாண்டமாக வெளியிடும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. 

தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி, நடிகர் நிவின் பாலி, நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா, இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன், தயாரிப்பாளர் ஆனந்த் பையனூர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

 actress thulasi

விழாவில் நடிகை துளசி பேசும்போது, “நிவினை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இளம் பெண்கள் முதல் வயதானவர்கள்வரை எல்லோருக்கும் நிவின் பாலியை பிடிக்கும். நான் உட்பட வயதான பெண்கள்கூட நிவினை சைட் அடிக்கிறோம். நிவினை பார்க்கும்போது இள வயது மோகன்லாலை பார்ப்பது போல் இருக்கிறது. வழக்கறிஞராக இருந்த கௌதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்…” என்றார்.

laksmi priya

நடிகை லட்சுமி பிரியா பேசும்போது, “கடந்த மூன்று வாரங்களாக எனக்கு பல வகைகளிலும் மீடியாக்கள் அளித்து வரும் ஆதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும்…” என்றார். 

shratha srinath

நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது, “என் கேரியரில் இந்த ரிச்சி படமும், படக் குழுவும் ரொம்பவே ஸ்பெஷல். எனென்றால் 2016 பிப்ரவரியில் நான் கலந்து கொண்ட முதல் தமிழ் ஆடிஷன் இதுதான். அந்த நேரத்தில் தமிழ் அவ்வளவாக எனக்கு தெரியாது. அதன் பிறகு நான் நடித்த ஓரிரு படங்கள்கூட  வெளியாகி விட்டன. ஆனால் ரிச்சி இப்போதுதான் வெளியாகவிருக்கிறது..” என்றார்.

0bac5f3f-5c52-43ed-b6f7-19bb5c02d9cc

தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி பேசும்போது, “தற்கொலை செய்து கொள்ளக்கூட பெரிய தைரியம் வேண்டும். தற்கொலை செய்து கொண்ட அந்த இளம் தயாரிப்பாளர் அசோக்குமாருக்கு என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ரிச்சி’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் கௌதம் ராமச்சந்திரனுக்கு நன்றி. ‘பிசாசு’ படத்தின் கன்னட பதிப்பில் ராதாரவி நடித்த கதாபத்திரத்தில் நடித்திருந்தேன். அதை பார்த்து என்னை நடிக்க சொல்லி கேட்டார்.

உடனவே என் மகன் விஷாலிடம் ‘எனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, நடிக்கட்டுமா..?’ என கேட்டேன். அவனும் எந்த மறுப்பும் சொல்லாமல் நடிக்க ஓகே சொன்னான். நான் இளைஞனாக இருக்கும்போதுகூட யாருமே  ஆதரவு கொடுக்கவில்லை.

அஜனீஷ் ஒரு நல்ல இசையமைப்பாளர். தமிழில் நல்ல இடத்தை பிடிப்பார். நிவின் பாலியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் எனக்கு ஷூட்டிங் இல்லைனாலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிடுவேன்.

நான் தமிழ்நாட்டில்தான் 55 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேறு மாநிலத்தவர் என்று என்னை சொல்ல விரும்பவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சிறந்த மாநிலம்…” என்றார் தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி. 

பாடலாசிரியர் வேல்முருகன் பேசும்போது, “நான் ஏற்கெனவே ‘நேரம்’ படத்தில் நிவின் பாலிக்கு ஒரு பாடல் எழுதியிருந்தேன். அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நேரம் படம் வெளியான நேரத்தில் ‘தமிழ்த் திரையுலகில் நீங்க பெரிய இடத்தை அடைவீங்க’ என சொல்லியிருந்தேன். அது நடந்திருக்கிறது. இந்தியாவின் முகமாகவும் மாறுவார் நிவின்…”  என்றார்.

nivin pauli

நாயகன் நிவின் பாலி பேசும்போது, “திரைத்துறைக்கு நான் வந்த நாள் முதலே தமிழில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ‘நேரம்’ ஒரு பை லாங்குவேஜ் படம், இதுதான் என் முதல் நேரடி தமிழ்ப் படம்.  படத்தில் இசையும், சவுண்ட் மிக்ஸிங்கும் சிறப்பாக வந்திருக்கிறது. சிறந்த நடிகர்கள் மற்றும் இந்த படக் குழுவுடன் வேலை செய்தது மிகச் சிறந்த அனுபவம். என் முதல் படம்.. உங்கள் ஆதரவு தேவை…” என்றார்.

விழாவில் நடிகர் முருகதாஸ், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்னாத், தயாரிப்பாளர் ஆனந்த் பையனூர், இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் ஆகியோரும் பேசினார்கள்.

Our Score