full screen background image

பாண்டியராஜன் நாயகனாக நடிக்கும் ‘ரியா தி ஹாண்டட் ஹவுஸ்’ படம்

பாண்டியராஜன் நாயகனாக நடிக்கும் ‘ரியா தி ஹாண்டட் ஹவுஸ்’ படம்

ஸ்ரீதயாகரன் சினி புரொடக்சன் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் என்.பன்னீர்செல்வம் தயாரிக்கும் திரைப்படம் ‘ரியா தி ஹாண்டட் ஹவுஸ்.’

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன் நடிக்கிறார். மேலும் இயக்குநர் கார்த்திக் சிவன், தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் .

இவர்களுடன், யாமினி, மாதவி, டிம்பிள், வையாபுரி, குமரேசன், சிவன் சீனிவாசன், மோகன்பாபு, ‘பிகில் சின்ன மருது மற்றும் ஏ.பி.ராஜ், தங்கபாண்டியன், கானா ரகு, கொடுங்கையூர் கானா சூர்யா, டோலாக்கு ப்ரவீண் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ரேசம் தாப்பா அறிமுக ஒளிப்பதிளராகவும் , சரவணக்குமார் மற்றும் சிவனேசன் உதவி ஒளிப்பதிவாளர்களாகவும், சத்யா கார்த்திக் உதவி இயக்குநராகவும், கொடுங்கையூர் கானா சூர்யா பாடல்கள் எழுத ஹரிபாபு – சபேஷ் சாலமன் இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். ரமேஷ் ரெட்டி _ கமல் ரெட்டி இருவரும் நடனப்  பயிற்சியையும், சீனு தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து, படத்தை இயக்கியும் இருக்கிறார் அறிமுக இயக்குநரான கார்த்திக் சிவன்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் கார்த்திக் சிவன் பேசும்போது, “இதுவொரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. பழைய இருட்டுபாளையம் என்ற ஊரில் பேய் வீடு ஒன்று ஊர் மக்களை திகிலில் இருக்க வைத்துள்ளது. அந்தப் பேய் வீட்டில் உள்ள பொருள் ஒன்றை எடுக்க நண்பர்கள் இருவர் தங்களின் சகாக்களோடு அந்த வீட்டில் நுழைகின்றனர். அதன் பிறகு அந்த வீடும், அந்த ஊரும் அல்லோகலப்படுகிறது. அவர்கள் அந்த மர்மப் பொருளை எடுத்தார்களா? அவர்கள் என்னவானார்கள்? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

திரில்லுக்கும் திகிலுக்கும் இடையில் காமெடியை சர வெடியாய் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது…” என்றார்.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள அழகிய இடங்களில் இந்தப் படம் வளர்ந்து வருகிறது.

Our Score