ஜியோ ஹாட் ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெப் வெளியீடாக ‘ரிசார்ட்’ (Resort) எனும் புதிய சீரிஸை அறிவித்துள்ளது.
வரும் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரிஸ், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 4 புதிய எபிசோட்களுடன் வெளியாகவுள்ளது.
பிரபல ‘எருமை சாணி’ மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான விஜய் குமார் ராஜேந்திரன் இந்த தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதையையும் எழுதியுள்ளார்.
சின்னத்திரை உலகில் முன்னணி இயக்குநராக அறியப்படும் பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக கை கோர்த்திருப்பது இந்த சீரிஸின் சிறப்பாகும்.
‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனைச் சொகுசு விடுதியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
முறையான கல்வி பெறாதபோதும் சமையல் கலை மீது அபார ஈர்ப்பும் திறமையும் கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த செஃப் ஆக வேண்டும் என்ற கனவை தன்னுள் வளர்த்துக் கொள்கிறார்.
அவரது லட்சியப் பயணத்திற்கும், பணியிடத்தில் நிலவும் அதிகார ஒடுக்குமுறைக்கும் இடையே உருவாகும் மோதல்களே கதையின் மையமாக அமைந்துள்ளது.
கோபக்கார தலைமைச் சமையல்காரராகவும், கதையின் முக்கிய எதிர்மறை கதாபாத்திரமாகவும் தலைவாசல் விஜய் நடித்துள்ளார்.
சமையலறையின் பதற்றமான சூழலை தனது மிரட்டலான நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார்.
இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
காமெடி, டிராமா, லட்சியம் மற்றும் சொகுசு விடுதியின் பின்னணியில் நிகழும் கலாட்டாக்கள் என பல்வேறு அம்சங்கள் கலந்த முழுமையான பொழுதுபோக்குத் தொடராக ‘ரிசார்ட்’ உருவாகியுள்ளது.
‘ரிசார்ட்’ வெப் சீரிஸ், மார்ச் 13 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோட்களாக ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது.









