“பேரறிவாளனை உடனே விடுதலை செய்யுங்கள்” – கவர்னரிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை..!

“பேரறிவாளனை உடனே விடுதலை செய்யுங்கள்” – கவர்னரிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பேரறிவாளனின் தாயார் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் இயக்குநர்களான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தங்களது கருத்தை பகிரங்கமாக வெளியிட்டிருந்தனர்.

“குற்றம் செய்யாத ஒருவருக்கு 30 வருட சிறை தண்டனை, அந்த மகனை விடுவிக்க ஒரு தாயின் 30 வருட போராட்டம். இதனை மனதில் கொண்டு பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக முதல்வர் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார்.

அதேபோல் இயக்குநர் பார்த்திபன் “அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும், தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்” என்று கூறியிருந்தார்.

இப்போது நடிகர் விஜய் சேதுபதியும் இதே கருத்தை முன் வைத்திருக்கிறார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோ செய்தியில்,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழக கவர்னர் அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அற்புதம்மாளின் 29 வருட போராட்டம், ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி…” என்று கூறியுள்ளார்.

Our Score