இன்று மே 30, 2014-ல் 4 நேரடி தமிழ்ப் படங்களும் 1 தெலுங்கு டப்பிங், 1 மலையாள டப்பிங் படமும் வெளியாகியுள்ளன.
1. பூவரசம் பீப்பி
‘கோலிசோடா’விற்குப் பிறகு சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.
இதில் கெளரவ் காளை, பிரவீன் கிஷோர், வசந்த் மற்றும் சில சிறுவர், சிறுமிகள் நடித்துள்ளனர். அருள்தேவ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்தைத் தயாரித்து ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
2. அது வேற இது வேற
இந்தப் படத்தை ஜெனி பவர்புல் மீடியாவின் சார்பில் களிகை எஸ்.ஜெயசீலன் தயாரித்திருக்கிறார்.
இதில் வர்ஷன், சானியாதாரா கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி சிங்கமுத்து , பொன்னம்பலம் தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி, சுப்புராஜ், வேல்முருகன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரவிஷங்கர், இசை – தாஜ் நூர், பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா, கருப்பசாமி, எடிட்டிங் – எம்.கே.கணேஷ். கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருப்பவர் M.திலகராஜன்
3. அம்மா அமமம்மா
‘ஆ. சந்திரசேகர் திரைக்களம்’ என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சம்பத், சரண்யா, ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, டி.பி. கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கே.பி. மணி ஒளிப்பதிவு செய்ய எம்.வி. ரகு இசையமைக்கிறார். திரைக்கதை, வசனம் எழுதி பாலுமணிவண்ணன் இயக்கியுள்ளார்.
4. கல்பனா ஹவுஸ்
அவன் இவன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த மதுஷாலினி நடித்திருக்கும் புதிய படம் ‘கல்பனா ஹவுஸ்’. இப்படத்தில் வேணு, கார்த்திக், திரில்லர் மஞ்சு, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். லியாண்டர் இசையமைக்கிறார். ஜி.பார்த்திபன் ஒளிப்பதிவு. அறிமுக இயக்குனர் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் ஏற்கனவே கன்னடம், தெலுங்கில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. அதே படத்தை தமிழிலும் அதே கலைஞர்களை கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.
5. அப்சரஸ்
இதுவொரு மலையாள டப்பிங் படம். ‘மகரமஞ்சு’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்த இந்தப் படம் இப்போது தமிழில் ‘அப்சரஸ்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்று ரிலீஸாகிறது..! இதில் சந்தோஷ் சிவன் ஹீரோவாகவும், ராதாவின் மகள் கார்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திகா நடித்த முதல் மலையாளப் படம் இதுதான்.. இவர் மட்டுமல்ல.. தமிழுக்கு அறிமுகமானவர்கள் இன்னும் சிலரும் படத்தில் இருக்கிறார்கள். நித்யா மேனன், மல்லிகா கபூர், பூர்ணா ஆகியோரும் படத்தில் உண்டு. ஒளிப்பதிவு மது அம்பட். இசை, ரமேஷ் நாராயண். எடிட்டிங், மகேஷ் நாராயணன். எழுதி இயக்கியவர் லெனின் ராஜேந்திரன்.
2011 செப்டம்பர் 30-ம் தேதியன்று கேரளாவில் ரிலீஸானது.. சிறந்த மேக்கிங் என்ற சினிமா விமர்சகர்களால் பெயர் பெற்றது.. கார்த்திகாவுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதும், பிலிம்பேர் விருதும் கிடைத்தது..
6. மந்தாகினி
இதுவொரு தெலுங்கு படத்தி்ன் தமிழ் ரீமேக்.