full screen background image

26 நாட்களில் படமான உண்மைச் சம்பவம்.. ’ரீங்காரம்’

26 நாட்களில் படமான  உண்மைச் சம்பவம்.. ’ரீங்காரம்’

ஜே ஸ்டூடியோஸ் மற்றும் சிட்ஸன் ​ ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரீங்காரம்’.

பாலா என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். ’கங்காரு’, ’வந்தா மல’ ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா ஹீரோயினாகவும், கலாபவன் மணி, ‘ஆடுகளம்’ ஜெயபாலன், சிந்தியா, சிங்கப்பூர் தீபன், தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இனியன் ஹரீஸ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அலி மெர்சா. இசையமைத்திருக்கிறார். புதுமுக இயக்குனர் சிவகார்த்திக் இயக்கியிருக்கிறார். இவர் அரசு சுரேஷ், சமுத்திரக்கனி, மூர்த்தி, C.J.பாஸ்கர் ஆகியோரிடம் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ‘ரீங்காரம்’ ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அவரவர்களின் எண்ண அலைகளைத்தான் ‘ரீங்காரம்’ என்கிறோம். மனசுக்குள்ள சந்தோஷப்படுகிற மாதிரியான நகைச்சுவையும், அடி மனசு வலிக்கிற மாதிரியான நிகழ்வுகளும், பார்த்துக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிற அழகும், மறக்கவே முடியாத அமைதியும், கலையா மதிக்கிற காதலும் சரிவர கலந்து திரைக்கதையை மட்டுமே முழுமையா நம்பி  பின்னப்பட்ட கதை ‘ரீங்காரம்’.

26 நாட்களில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. துவக்கத்தில் கதாநாயகனுக்கு 6 மாத காலம் நடிப்பு பயிற்சி கொடுத்தோம்.. படம் முழுவதுமே வசன மொழி குறைவு.. உடல் மொழி அதிகம், அதுக்காக அவரைத் தயார் செய்யவும் எங்களுக்கு ஆறு மாதங்களாகியது.

லெக்கின்ஸ் காலத்தில்  கவர்ச்சியே இல்லாமல் படம் செய்வது மிகப் பெரிய சவால். ஆனால் நாங்க சென்சாருக்கு வேலையே இல்லாமல் அப்படியொரு படம் பண்ணியிருக்கோம்ங்கிறது மிகப் பெரிய சந்தோஷம். 

வாழ்க்கை நாம தயாரிக்கிற அட்டவணைக்குள்ள எப்பவுமே அடங்கறதில்ல… அது போடுற அட்டவணைக்குள்ளதான் நம்மை அடக்கும். அது கூட்டிப் போற திசையை யாராலும் யூகிக்க முடியாது… அந்த யூகிக்க முடியாத திசையோட ஒரு பக்கம்தான் இந்த ‘ரீங்காரம்’. ‘ரீங்காரம்’ வெற்றிக்கான அங்கீகாரமாக மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்…” என்கிறார் சிவகார்த்திக்.​

 

Our Score