உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ‘நெடுஞ்சாலை’

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ‘நெடுஞ்சாலை’

பைன்போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன்,  ஆஜூ ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படமான ‘நெடுஞ்சாலை’யை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வாங்கி வெளியிடுகிறார்.

இதில் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷிவதா நடித்திருக்கிறார். மற்றும் கண்ணன் பொன்னையா, தம்பி ராமய்யா, பிரசாந்த் நாராயண், மலையாள நடிகர் சலீம்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

வசனம்   –    ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன்

ஒளிப்பதிவு    –   ராஜவேல்

இசை    –   சி.சத்யா

கலை  –  சந்தானம்

எடிட்டிங்    –  கிஷோர்

நடனம்   –   நோபல்

ஸ்டன்ட்    –  சூப்பர் சுப்பராயன்

பாடல்கள்   –  கார்த்திக் நேத்தா, மணிஅமுதன், கண்ணன் பொன்னையா.

தயாரிப்பு    –     சௌந்தர்ராஜன், ஆஜூ

கதை, திரைக்கதை, இயக்கம்   –   கிருஷ்ணா

படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணாவிடம் கேட்டோம்….

“ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த உண்மை நிகழ்வை திரைக்கேற்ற மாதிரி உருவாக்கி இருக்கிறோம். 1980-ம் ஆண்டு நடந்த நிஜ சம்பவம் இது. இதில் காதலையும் கலந்து கொடுத்திருக்கிறோம். பாடல்களும், படமாக்கப்பட்டவிதமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெரும். படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் உடனே படத்தை வெளியிட வாங்கியது எங்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இம்மாதம் 28-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது நெடுஞ்சாலை…” என்றார்.

Our Score